சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் sk23 படத்திலும், சுதா கொங்கரா  இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் எஸ்கே 23 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாக உள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுதா கொங்கராவும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ சிவகார்த்திகேயன்… உங்களுடன் இணைந்து பணிபுரிவதில் முழுமையான மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.