தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிலையில் தற்போது முன்னணி ஹீரோவாக சொல்கிறார். இவர் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்தல நிலையில் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் எஸ்கே23 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிப்பார் என்று கூறப்பட்ட  நிலையில் தற்போது வித்யூத் ஜமால் நடிப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து அஞ்சான் படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார். மேலும் வில்லன் அறிமுகம் தொடர்பான வீடியோ ஒன்றையும் பட குழு வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.