இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் இன்று மதியம் ஹைதராபாத்தில் இரண்டாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மூன்றாவது லீக் ஆட்டம் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா மற்றும் கலீல் அகமது டக் அவுட் முறையில் அவுட் ஆகினர். அதன் பிறகு திலக் வர்மா மற்றும் சூரியகுமார் ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் சூரிய குமாரை எம்.எஸ் தோனி கேட்சில் அவுட் ஆனார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.

இறுதியில் மும்பை அணி சென்னை அணையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.