
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றை பதும் நிசாங்க படைத்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் இலங்கை வீரர் பதும் நிசங்கா. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 139 பந்துகளில் 210 ரன்கள் குவித்து அசத்தினார் பதும் நிசாங்கா. பல்லேகெல்லே மைதானத்தில் 139 பந்துகளில் 20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் நிசாங்கா. இலங்கை சார்பில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் நிஷாங்கா.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பல்லேகெல்லே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போோட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி ஆடி இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிஷாங்கா அதிரடியாக ஆடினார். மற்றொரு துவக்க வீரர் ஆபீஸ் பெர்னான்டோ அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட் 182 ரன்கள் சேர்த்தது. பின் அவிஷ்க பெர்னாண்டோ 88 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிஷாங்கா சதத்தை கடந்தார். தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு நிஷாங்கா மற்றும் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து 122 ரன்களை சேர்த்தனர். பின் சமர விக்ரம 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக அடிய நிஷாங்கா சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். அசலங்கா (8 ரன்கள்) மற்றும் நிஷாங்கா (210 ரன்கள்) அவுட் ஆகாமல் கடைசி வரை இருந்தனர்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. மேலும் அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்களும், சமரவிக்ரம 45 ரன்களும் எடுத்தனர். சனத் ஜெயசூர்யா தனது சாதனையை (189 ரன்கள்) முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுடன் முதல் இலங்கை வீரராக பதும் நிஸ்ஸங்க வருவதைப் பார்த்து கைதட்டினார்.
Pathum Nissanka breaks the record in front of great Sanath Jayasuriya & becomes the first Sri Lankan to score a double hundred in ODI history. 🔥
210* runs from just 139 balls – one of the all time great knock by a Sri Lankan player. pic.twitter.com/qzmFlHwCpR
— Johns. (@CricCrazyJohns) February 9, 2024