மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம் மற்றும் கலாசாரத்தை விமர்சிக்கின்றனர் என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்து மதத்தை வெறுப்பவர்கள் எல்லாம் காலத்திலும் உள்ளனர்.

நாட்டில் இன்று சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வது, மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுப்படுவதை பார்க்கிறோம். இவர்களை சில வெளிநாட்டவர்கள் ஆதரிக்கின்றனர். அடிமை மனநிலை உள்ளவர்கள் நமது மதம், கலாசாரம், நம்பிக்கை, பண்பாடு மற்றும் பண்டிகைகளை விமர்சிக்கின்றனர். இயற்கையாகவே முற்போக்கு தன்மை உள்ளவர்கள் நமது மதம் மற்றும் கலாசாரத்தை விமர்சிக்கின்றனர். அவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க நினைக்கிறார்கள் என்று கூறினார்.