சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ஆர்.கே நகர் மெயின் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கவின் தனது பாட்டியுடன் கருப்புசாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். விழாவை முன்னிட்டு வண்ண அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலங்கார மின் விளக்கை தொட்ட போது எதிர்பாராதவிதமாக கவின் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் கவின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.