இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து நடைபெற உள்ள 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருப்பவர் ஹாரி புரூக். இவர் வருண் சக்கரவர்த்தியின் சுழற் பந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் ஆட்டம் இழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தார்.

முன்னதாக இந்த டி20 யின் முதல் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அந்த அணியின் துணை கேப்டன் புகை மூட்டமாக இருந்ததால் பந்தை பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அதன் பின் சென்னையில் 2-வது போட்டி நடைபெற்றது. அப்போது அவர் பந்தை கணிக்காமல் இருந்ததால் ஆட்டம் இழந்தார். இதனால் அவருக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஸ்வின் ஹாரி புரூக்கின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சென்னையில் புகை மூட்டம் இல்லை.

வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை அடித்து ஆடுவது மிகவும் சிரமம் நான். ஹாரி புரூக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், வருண் சக்கரவர்த்தியால் லெக் ஸ்பின் வீச முடியாது. அவர் வீசுவது கூக்ளி. அவர் வீசிய பந்து எப்படி வருகிறது என்று நீங்கள் பார்க்கவில்லை. அதேபோன்று அவரது பந்தை உங்களால் கணிக்க முடியல. ஸ்டம்பை மறைத்துக் கொண்டு நின்று பெரிய ஷார்ட் ஆட முயற்சி செய்து ஆட்டம் இழந்தீர்கள். சக்கரவர்த்தியை போன்ற ஒரு சுழற் பந்துவீச்சாளரை எதிர்த்து ஆடும் போது சரியான இடத்தில் நின்று பந்தை முறையாக பார்க்க வேண்டும் என்று கூறினார்.