பீகாரின் கைமூர் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு ஆளான நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுபோதையில் இருப்பதாக கூறி போலீசார்  சந்தேகித்து கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடிக்கு ஆளான அந்த இளைஞர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல முயன்றபோது, போலீசார் அவரை நிறுத்தி, மது அருந்தியுள்ள நிலையில் இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அந்த இளைஞரிடம்  போலீசார்;  2,000 ரூபாய் கேட்டதாகவும் ஆனால் அவரிடம் அப்போது அந்த தொகை இல்லை மேலும் , 700 ரூபாய் வாங்கும்  வரை அவரை 3 மணி நேரம் காவலில் வைத்திருந்ததாக இறந்த நபரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், அந்த இளைஞர் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

எனினும், போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இளைஞரின் மரணம் தொடர்பாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையல்ல என்று போலீசார் கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.