
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் கடைவீதியில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் பகுதிக்குள் புகுந்தது.
சில வாலிபர்கள் பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. இதனை தொடர்ந்து ஸ்கூட்டரின் முன் பக்கத்தை கழற்றிய பிறகு பொதுமக்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். பெண்ணாடம் கடைவீதியில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.