உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியதாவது, சுபம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேறு பெண்களுடன் தகாத உறவில் இருந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சுபம் சலோமியை துன்புறுத்தியுள்ளார். இதனால் இருவீட்டாரும் பஞ்சாயத்து பலமுறை செய்து செய்திருக்கிறோம்.

இருப்பினும் சுபம் செயலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதற்கிடையில் கடந்த மாதம் சுபம் சலோமியின் பெயரில் 25 ஆயிரம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் தொடங்கினார்.

இதற்காக 2 லட்சம் ரூபாய் ப்ரீமியம் செலுத்தப்பட்டது. இதில் சுபம் தனது பெயரை நாமினியாக கொடுத்திருந்தார். இந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக சுபம் சலோமியை கொலை செய்த இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, சலோமேன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சலோமியின் உடலில் பாம்பு விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணத்திற்காக கணவர் சுபம் – சலோமியாவின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் முதல் கட்டமாக சுபம் கைது செய்த நிலையில், அவருடன் சேர்ந்து அவரது பெற்றோரும் மற்றும் மற்றொருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சலோமியின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.