
செல்லப்பிராணிகள் செய்யும் சில வித்தியாசமான செயல்களை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். இதேபோன்று ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த செல்லப் பிராணி ஒன்று ஹனுமன் பாடல் கேட்டதும் அதற்கு பதில் அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் “ரக்னர்” என்ற நாய் ஒன்று வீட்டின் சுவர் அருகே அமைதியாக படுத்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த நாயின் உரிமையாளர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு பாடலாக வைக்கிறார். ஆனால் எந்த இசையை கேட்டும் ரக்னர் எந்த ஒரு அசைவும் காட்டாமல் அமைதியாக ஓய்வெடுத்தது.
View this post on Instagram
அதைத்தொடர்ந்து அந்த உரிமையாளர் ஸ்ரீ ஹனுமன் சாலிசா என்ற பாடலை வைத்ததும் ரக்னர் திடீரென எழுந்து நின்று அந்தப் பாடலுக்கு ஏற்ப தனது கழுத்தை உயர்த்தி அந்தப் பாடலை பாடும் பாடகரோடு இணைந்து பாடுவது போல குரல் கொடுத்தது. இதனை அந்த நாயின் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது 11.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. மேலும் நாயின் பக்தியை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.