
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு குட்டிகளுடன் மூன்று யானைகள் நிற்பது போன்ற உருவ சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் சிலைகள் முன்பு நின்றபடி செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல மோர் பாயிண்ட் பகுதியில் இருக்கும் காட்டெருமை சிலை முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கின்றனர். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விலங்குகளின் உருவ சிலைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.