
தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக இருந்தனர்.
இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் செல்வதாக உறுதி கொடுத்ததால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அமைச்சர்களின் பேச்சு வார்த்தை சமூகமான முறையில் முடிவடைந்ததால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.