இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவருமே சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தினசரி ஈடுபாடு ஒரு நாளைக்கு 194 நிமிடங்கள் என்று Esya centre வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஓடிடி தலங்கள் மற்றும் ஆன்லைன் கேமில் செலவழித்த 44 நிமிடங்கள் மற்றும் 46 நிமிடங்களை விட இது மிகவும் அதிகம். மேலும் ஒரு மாதத்திற்கு ஆன்லைன் கேமில் 100-க்கும் குறைவாகவும் ஓடிடி தளங்களுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை செலவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.