திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது.

பின் தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். மனைவிக்கு குழந்தை பிறக்க இன்னும் ஊரிருநாட்களே உள்ள நிலையில், அருண்குமார் கடந்த 4 நாட்களாக தனது வேலையை முடித்து விட்டு மனைவியை பார்க்க சிலுக்குவார்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அதேபோன்று நேற்று முன்தினம், தனது மனைவியை பார்க்க சென்ற அருண்குமார் தலை,கை,கால்,மார்பு,கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயமுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் முடிந்து ஒரு வருடமான நிலையில், குழந்தை பிறக்க இன்னும் ஒரிருநாட்களே இருக்கிறது என்று மனஉளைச்சலில் அவரது மாமியார் சின்னபொண்ணு(46) இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் நாகம்மாள் மனஉளைச்சலில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.