
இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடும் பெண்ணிடம் சிறுவன் ஒருவன் பணத்தை வீசுகிறான். இதனை கண்ட சிறுவனின் தந்தை ஓடி வந்து தன் கையில் இருந்த கட்டையால் தன் மகனை சரமாரியாக அடித்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். மற்றவர்கள் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலான நிலையில் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு “தந்தை கண் பார்வைக்குள்ளே அதிகமாக அனுபவிக்க முயற்சி செய்ததின் விளைவு இது” என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் தந்தையின் நடவடிக்கையை ஆதரித்து, “பணத்தை வீணடிக்க கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்-மக்கள் உறவு, தனியுரிமை, மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து புதிய விவாதங்களை தூண்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Kalesh over Father Caught his Son giving money to Stage Dancer:
pic.twitter.com/7c5roCUpdf— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 26, 2025