தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வினா விடை நேரத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் அனைத்து சேவைகளையும் இ சேவை மையம் மூலமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதன் பிறகு விரைவில் இ சேவை மையம் 2.0 திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இ சேவை மையங்களில் 600 அரசு பரிவர்த்தனைகள் மற்றும்‌ 235 சேவைகள் என அனைத்தையும் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அரசின் திட்டங்களும் சேவைகளும் வெளிப்படை தன்மையின் மூலம் விரைவாக கிடைக்கும். மேலும் மத்திய அரசின் சேவைகளையும் இ சேவை மையத்தின் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.