
விடுதலை பாகம் 2 படம் குறித்து நடிகர் சூரி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற விடுதலை படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது வரும் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் படத்திற்கான படப்பிடி ப்பு தற்போது தொடங்கியுள்ளது.
படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி குமரேசனாகவே வாழ்ந்திருந்த நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை-2 படப்பிடிப்பு குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், குமரேசன் ரெடி என கதாபாத்திரத்தை தயார்படுத்துதல் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குமரேசன் ரெடி!#ViduthalaiPart2 Shooting In Progress #vetrimaaran @rsinfotainment pic.twitter.com/aW7fzaOG77
— Actor Soori (@sooriofficial) July 17, 2023