
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா… இந்திய ஜனநாயக புலிகள்…. இப்போ பெரியார் அய்யா அவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கத்தால் தான் சவுத் இந்தியா இந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கின்றது. அதே திராவிடர் கழகம் அவர்கள் தான் பொறுப்பு என சொல்லலாம். ஏன்னா அவங்க சரியா இந்தியா முழுமைக்கும் அவருடைய சித்தாந்தத்தை…. அவருடைய நோக்கத்தை…. எல்லாருக்குமான சமத்துவத்தை கொண்டு போய் சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம் எல்லாருக்கும் தெரியுது.
ஒரு சின்ன பையன் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசி இருந்தான். பாராட்ட வேண்டிய விஷயம்… சரியா பெரியார் இருந்திருந்தால், அவருடைய சீடர்கள் இன்னும் சரியாக கொண்டு போய் இருந்து இருக்கணும்… இப்போ அவருடைய சீடராக நாங்கள் இருக்கலாம். இதுல பாருங்க எல்லாமே போட்டு இருக்கோம்…
நீங்க கேட்டீங்க இல்ல, தமிழ் தேசியம் தலைவன் அண்ணன் காயிதே மில்லத் இருக்கார், பெரியார் அய்யா இருக்கார், காந்தி இருக்கார், காமராஜர் இருக்கார், நம்மாழ்வார் இவர்களை எல்லாம் ஆதர்ஷ புருஷர்களாக நினைத்து தான் ஆரம்பிச்சிருக்கோம். பிரபாகரனை போட்டோவில் மிஸ் பண்றேன்… அவர் மாவீரன் தான். அதில் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. நாங்க இந்திய அளவுக்கு கொண்டு போறதால,
அவரை நாங்கள் வெறுக்கிறேன் என்று நீங்க சொல்ல முடியாது.. எங்களுடைய அரசியல் இந்த மாநில மக்களுக்கு உரிமை பெற்று தருவது, அதே நேரத்தில் தமிழீழம் முதலில் பெற்று தருவோம். அதற்கு முன்னாடி கச்ச தீவை நாங்கள் வாங்கி கொடுப்போம். இது தேர்தல் அஜெண்டா… என்ன ஆனாலும் சரி, வாங்கி ஆகணும் என தெரிவித்தார்.