தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு முன்னதாக காலாண்டு விடுமுறை 5 நாட்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து 9 நாட்களாக விடுமுறை நீடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற தற்போது பள்ளிக் கல்வித் துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிகளை தூய்மையாக வைத்திருப்பதோடு, பள்ளி திறக்கும் முதல் நாளே திருத்தி விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.