இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனில் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 14, 2025 அன்று மாலை 7.30 மணி அளவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் எம்.எஸ். தோனியின் தலைமையில் சி.எஸ்.கே அணி போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

இதனிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சி.எஸ்.கே வீரர்கள் அனுமன் கர்ஹி, அயோத்தி  கோயிலுக்கு சென்று தங்களது ஆட்டத்திற்கு முன்பு ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சி.எஸ்.கே வின் முக்கிய வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் அயோத்தி ராம்லா கோவிலில் வழிபட்டனர்.

இந்த ஆன்மீக பயணம் வெறும் தரிசனமாக அல்லாமல்  அணியினர் இடையே ஒற்றுமை வளர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இந்த ஆன்மீக வழிபாடு அவர்களின் அடுத்த போட்டிக்கு ஒரு நம்பிக்கையும், உந்துதலையும் வழங்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.