குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் சிங்கத்தின் மீது மோதினார். இதனால் விபத்தில் சிக்கிய பெண் சிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் லாரி ஓட்டுனரை அடையாளம் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பின்னர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனவிலங்கு திருத்தச் சட்டம் 2022 ஆகியவற்றின் கீழ் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை தாக்குதல் செய்துள்ளார். தற்போது அந்த தாக்குதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.