
மகேந்திர சிங் டோனி 2007 டி-20 உலக கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த வெற்றி கேப்டனாக விளங்குகின்றார். இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். இவருக்கு ஜார்கண்ட் அரசால் அன்பளிப்பு பத்திரம் மூலம் ஹர்மு கௌசி காலனியில் 5 கட்டா நிலம் ஒதுக்கப்பட்டது.
இக்காலணையிலுள்ள தனது வீட்டை வணிக நோக்கங்களுக்காக தோனி பயன்படுத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில வீட்டு வசதி வாரியம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் தோனிக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என வீட்டு மனை வாரியத்தின் தலைவர் சஞ்சய் லால் பஸ்வான் தெரிவித்துள்ளார்.