ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பிறகு அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன் அழுது கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ஆனது. இதனால் அவருடைய சொத்து மதிப்பு குறித்த பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது.  மீடியா துறையில் காவியா மாறன் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய தந்தை இந்தியாவின் டெலிவிஷன் கிங் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன்.

கலாநிதி மாறனின் ஒரே பெண் பிள்ளைதான் காவியா மாறன். இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 82வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு சுமார் 24000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. பாரம்பரிய மற்றும் தனது சொந்த முயற்சியால் காவ்யா மாறன் சொத்து சேர்த்துள்ளார். அதன்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.