மத்திய பணியாளர் அமைச்சகத்தின் SSC தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்திய பணியாளர் தேர்வாணையம் எதிர்காலத்தில் 22 இந்திய மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்த உள்ளதாக அறிவித்தது.

அதாவது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய பிராந்தி மொழிகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திரர் சிங் தெரிவித்துள்ளார்.