
திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,
அதாவது நல்லா புரிஞ்சுக்கோங்க… ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஓஹோன்னு பேசுறது நாங்க அல்ல… கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு திட்டி பேசுவதும் கிடையாது. மக்களுக்கு எது நன்மை கிடைக்கிறது ? மக்களுக்கு எது பாதிப்பு கொடுக்குறதோ, அப்போ நாங்க எதிர்த்து குரல் கொடுப்போம், நல்லா புரிஞ்சுக்கோங்க….
கூட்டணியில் இருக்கிறபோது ஓஹோன்னு பேசுவாங்க… கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகு, அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வாங்க, அது சரியல்ல…என்றைக்கும் ஒரு நம்பிக்கை இருக்கணும். ஒரு கட்சின்னா ஒரு ஐஎஸ்ஐ மாதிரி ஒரு முத்திரை இருக்கணும். எங்களை பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கின்ற போது நிச்சயமாக, யாராக இருந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்போம்.
இது மக்களவைத் தேர்தல். பத்தாண்டு காலம் பிஜேபி தான் ஆட்சியில் இருந்தார்கள். அவருக்கு எதிரான ஒரு விஷயத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,
எதிர்பார்ப்பு இருக்கும், பொறுங்க. இப்பதானே காலம் ஆரம்பிச்சிருக்குது… பாருங்க போகப் போக சிறப்பா இருக்கும்…. நீங்க எண்ணுவதெல்லாம் நடக்கும், கவலைப்படாதீங்க… ஏன் வருத்தப்படுறீங்க ? இன்னும் காலம் இருக்குது. இப்பதானே வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றோம். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய திட்டத்தை வரவேற்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி இருக்கின்றபோது அதை எதிர்ப்போம், இதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.