நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையினர்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் சென்னை போரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது