ஒரு நபர் மற்றும் தெருநாய்களுக்கு இடையே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை இந்த வீடியோ பதிவு எடுத்துக்காட்டுகிறது. இந்தக் காணொளியில் ஒரு நபர் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார், அவர் அருகில் ஒரு தெரு நாய் பாசமாக வந்து பழகுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த தெரு நாய் தலையில் அன்பாக தடவி கொடுக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் அமைதியாக இருந்த அந்த நாய் சிறிது நேரம் கழித்து அவரை தாக்க துவங்குகிறது, இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் எதிர்பாராத திருப்பத்தில் எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி அந்த நாய் அவரைத் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில் பழக்கம் இல்லாத தெரு நாய்களுடன் நெருங்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் விலங்குகள் நல பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் தெருநாயுடன் பழகும் போது பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வின் அவசியத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

“>