புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் காலனி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கவிதா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு அருகே இரண்டு தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது.

இதனை சிலர் வேண்டுமென்று கலந்திருக்கலாம் என கூறி ஒரே சந்தேகப்படும்படியாக இருக்கும் 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.