
ஐஐடி கான்பூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, தொழில்நுட்பமும் இயற்கையும் மோதும் அரிய தருணத்தை வெளிப்படுத்தியுள்ளது. “Stray dogs play with Robot Dog in IIT Kanpur, India” என்ற விளக்கத்துடன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நான்கு கால்களில் நடக்கும் ரோபோ நாய் தனது அசைவுகளை சோதனை செய்யும் போது, மூன்று தெரு நாய்கள் அதை சுற்றி ஆர்வத்துடன் பார்த்து, பயமும் குழப்பமும் அடைந்தது.
அந்த இயந்திரம் நாய் போலவே நகர்வதாலும், ஆனால் உயிரினமாக அறியப்பட்ட வாசனையோ, நடமாட்டத் தன்மையோ இல்லாததால் நாய்கள் குழம்பிய நிலையில் காணப்படுகின்றன. இந்த சம்பவத்தை கான்பூர் ஐஐடி மாணவர்களும் பேராசிரியர்களும் ரசித்து பார்க்கின்றனர். ஒரு நாய் கூடத்தில் நின்று பயத்தில் காத்திருப்பது கூட வீடியோவில் தெரிகிறது.
Stray dogs play with Robot Dog in IIT Kanpur, India. pic.twitter.com/XudSh5vFFo
— Imtiaz Mahmood (@ImtiazMadmood) March 28, 2025
சமூக வலைதளங்களில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், “நாய்கள் பயந்துவிட்டன,” “இது அற்புதமானது” போன்ற கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோ, ரோபோடிக்ஸ் துறையின் முன்னேற்றத்தையும், விலங்குகளின் இயல்பான ஆர்வத்தைவும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஓர் அரிய எடுத்துக்காட்டாக உள்ளது.