
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள ராம்வாடி தாஜ் நகரில் பெண்களை கொடூரமான முறையில் தாக்கும் தெரு நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு குடியிருப்பு வளாகத்தில் நுழையும் பெண்ணை அங்கு நின்று கொண்டிருந்த நாய் திடீரென கடிக்க முயற்சிக்கிறது.
அந்தப்பெண் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுகிறார். உடனே அந்த நாய் அருகில் இருந்த மற்றொரு வயதான பாட்டியை கடிக்க முயற்சிக்கிறது. இந்த தாக்குதலில் அந்த வயதான பாட்டி தடுமாறி கீழே விழுகிறார். உடனே நாய் அவரை கடிக்க அவர் மீது பாய்கிறது. உடனே அருகில் இருந்த பெண்கள் நாயை தடுப்பதற்காக அதன் மீது ஒவ்வொன்றாக எரிகின்றனர்.
पालघर में बढ़ता कुत्तों का आतंक… दहानू की सोसायटी में बुजुर्ग महिला समेत एक अन्य महिला पर खूंखार कुत्ते का जानलेवा हमला
रामवाड़ी ताजी नगर में बैठा कुत्ता अचानक महिलाओं पर झपट पड़ा. CCTV में कैद हुई इस खौफनाक घटना में वंदना लोहार नामक बुजुर्ग महिला गंभीर रूप से घायल हो गईं.… pic.twitter.com/RR0ZNwtZzA
— AajTak (@aajtak) April 7, 2025
இந்த வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த வருகின்றனர்.