
மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் கிருஷ்ணா அம்ரோல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார்.
அப்போது விஜயவாடா சென்று அங்கிருந்து 2 பெரிய பைகளை கொண்டு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த நபரை பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூருக்கு கஞ்சா கொண்டு செல்வதாக காவல்துறையினரிடம் கிருஷ்ணா அம்ரோல் தெரிவித்தார். மேலும் அங்கு மாணவர்கள், தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கிருஷ்ணா அம்ரோலை சிறையில் அடைத்தனர்.