அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பெட்ஃபோர்டில் உள்ள ஹார்வுட் ஜூனியர் ஹைஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கோப்புறா பகுதியில் காலை 8 மணி அளவில், இரு மாணவர்களுக்கு  இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

சுமார் 100 பேர் அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், ஒரு ஆசிரியர் மாணவர்கள் மோதிக்கொண்டிருக்கும் இடத்தில் கையில் காபி கப்பை பிடித்துக்கொண்டு இருந்தவாறே, வெறும் ‘பார்வையாளர்’ போல நடந்துகொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

 

பள்ளி பாதுகாப்பு அதிகாரி விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். ஆனால், ஆசிரியர் மாணவர்களை பிரிப்பதில் எந்தவித சுறுசுறுப்பும் காட்டாமல் காபி குடிக்க முயற்சித்ததற்கான காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. இது தொடர்பாக பெட்ஃபோர்டு போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களை குறித்த தகவல்களை டாரன்ட் கவுண்டி சிறுவர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

பள்ளி முதல்வர் பெற்றோர்களிடம், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், மாணவர்களின் ஒழுக்க விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.