
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நகர்மன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பிரகதாம்பாள் அரசு மேல்நிலை பள்ளி அருகே முடிவடைந்தது.