ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பழனிச்செல்வம்- குரு லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சற்குருநாதன் என்ற மகன் உள்ளார். சற்குருநாதன் தற்போது 7ம் வகுப்பு படித்தது வருகிறார். அவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கில தேதியை கூறினால் அதற்குரிய கிழமையும் தமிழ் மாத தேதியும் கூறும் அதிசய ஞானம் பெற்றவராக இருக்கிறார். அவரிடம் 2050 ஆண்டுக்கான காலண்டரை உருவாக்க சொன்னால் ஒரு சில நிமிடங்களில் அட்டவணையை உருவாக்குவார்.

மேலும் அதில் உள்ள பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழா நாட்கள் ஆகியவை சரியான முறையில் குறிப்பிடுவார். இவரின் திறமையை கண்டு ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் வியக்கின்றனர். நம்மிடம் கடந்த மாதத்தின் தேதியை கேட்டால் உடனே யோசிப்போம். ஆனால் இந்த மாணவர் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தேதி மற்றும் எதிர்காலத்தில் உள்ள தேதிகளை கூறி வருகிறார். இந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைக்கிறது.