
ராணுவ அதிகாரி திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி ஜாங் சோன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்னுக்கு அடுத்த படியாக நாட்டில் மிகவும் அதிகாரம் வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ அதிகாரி ஜாங் சோன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையகத்தின் துணை தலைவரும் கட்சியின் மத்திய குழு செயலருமான ஜாங் சோன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரியோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ராணுவ அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.