
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைகிறது. இதேபோல் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி பிடிக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய சமிதி கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது . 230 இடங்களில் 163 இடங்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதலமைச்சர் சிவராஜ் சிங் கானை அவரது போபாலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
#WATCH | Madhya Pradesh | State Congress president Kamal Nath meets Chief Minister Shivraj Singh Chouhan at his residence in Bhopal.
The party registered a thumping majority in the state election, winning 163 of the total 230 seats. pic.twitter.com/CSTFecTjKC
— ANI (@ANI) December 4, 2023