
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சனோன். இவர் தற்போது ஓம் ராகத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்துள்ளார். இப்படத்தில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ராமனாகவும், சைபஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாட்சியை ஏற்படுத்திய நிலையில், பல கோடி செலவு செய்து அதை பட குழுவினர் சரி செய்துள்ளனர்.
கூடுதலாக 100 கோடி செலவு செய்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகை கீர்த்தி கவர்ச்சியான உடைகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் அவர் சீதையாக நடிக்க தகுதியானவர் கிடையாது என ரசிகர்கள் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது பட குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.