ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே பணம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சச்சின், ஹிமானி நர்வாலை கைபேசி சார்ஜிங் செய்யும் ஒயரை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை கருப்பு நிற சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் படி இந்த கொலையை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் செயல்பட்டு உள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.