கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும் ஜெயவேல் பிடாரி அம்மன் கோவில் அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.