
மொபைல் எண் மூலம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ள முடியும். இந்த மொபைல் எண் ஃபான்சியாக கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். ஏனென்றால் ஃபான்சி நம்பர் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும், அதோடு அந்த நம்பர் தனது பிறந்த நாள் அல்லது பிறந்த வருடம் அல்லது தனக்கு பிடித்த நம்பர் என்றால் மனதில் வைத்துக் கொள்ள அது மிகவும் எளிதாக இருக்கும். எனவே அனைவரின் ஃபான்சி என் தேவையை பூர்த்தி செய்ய பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது. இதனை மின் ஏலத்தின் மூலம் ஃபான்சி எண்களை BSNL நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஃபான்சி நம்பர் வேண்டும் என்றால் அந்த நபர் மின் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இந்த வேலிட்டி எண்கள் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வகைகளில் கிடைக்கின்றது. தமிழ்நாட்டில் 10.12.2024 முதல் 19.12.2024 வரை இந்த ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முதலில் BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Login அல்லது Register-யை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். அதன் பின் உள்நுழைவு விவரங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மின்னஞ்சலுக்கு வந்துள்ள உள்நுழைவு விவரங்களை உள்ளிட்ட வெற்றிகரமாக உள்நுழைய வேண்டும். அதன் பின், அதில் உள்ள பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
இதையடுத்து ‘Continue to Card’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் கட்டணத்தை செலுத்தி நீங்கள் விரும்பிய என்னை எடுப்பதற்காக ஏலத்தில் குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஃபான்சி நம்பருக்கு 3 பயனாளர்களை BSNL நிறுவனம் தேர்ந்தெடுக்கும். மீதமுள்ளவர்களுக்கு, அவர்களுடைய பதிவு கட்டணம் 10 நாட்களுக்குள் திரும்பி அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் குறிப்பிட்ட ஏலத் தொகையின்படி h1,h2,h3 என வகைப்படுத்தப்படுவார்கள். அதிக தொகை கொடுத்தவருக்கு எண் ஒதுக்கப்படும். அதை அவர் எடுக்க விரும்பவில்லை என்றால், அடுத்தவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும். மின் ஏலத்தில் நம்பரை வென்றவர்க்கு அடுத்த சில நாட்களில் அந்த எண் அவருக்கு வழங்கப்படும்.