
மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, வாழ்க்கைச் செலவை சமாளிக்க அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வழிவகுத்துள்ளது. இந்த புதிய திருத்தம் கட்டிட கட்டுமானம், தூய்மைப் பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல், சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பெரும் பயனாக இருக்கும். அக்டோபர் 1, 2024 முதல் புதிய ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன, இதன் மூலம் பல்வேறு திறன் நிலைகளில் உள்ள தொழிலாளர்கள் நன்மை பெறுவர்.
இந்த திருத்தம் திறமையற்ற, அரை திறமையான, திறமையான மற்றும் மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியங்களை பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், குறிப்பாக ஏ பகுதிகளில், புதிய விகிதப்படி மாதத்திற்கு ரூ. 20,358 முதல் ரூ. 26,910 வரை வருமானம் பெறுவார்கள். இதனால் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில் இருந்து தெரிவிக்கப்படுகையில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான விலைகுறியீட்டு சுட்டெண்ணின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை இந்த திருத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர்கள் துறை மற்றும் பகுதி அடிப்படையில், குறைந்தபட்ச ஊதிய விவரங்களை clc.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம்.