செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுண்டை ஓபன் செய்யலாம். அதோடு இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்தில் ஒரு வீட்டில் அதிகபட்சமாக இரண்டு பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டம் பெண் பிள்ளையின் 18 வயது பூர்த்தியான நிலையில் பாலிசி மெச்சூர் தானாக அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து ஒரு மாதத்திற்கு 5000 ரூபாயை நீங்கள் முதலீடு செய்யும்போது ஒரு வருடத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருப்பீர்கள். இந் நிலையில் 8.2% என்ற வட்டி விகிதத்தில் உங்களுக்கு 15 வருடத்தில் 9 லட்சம் ரூபாய் முதலீடாக இருக்கும் பட்சத்தில் இதற்கான வட்டி 18.92 லட்ச ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் மொத்த மெச்சூரிட்டி தொகை ரூ. 27.92லட்சம் உங்கள் கைக்கு வரும். இந்த திட்டத்தில் ஒருவர் 1 ஆண்டில் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 15 வருடத்தில் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இந்நிலையில் வட்டி 31.53 லட்சம் ஆகும். மெச்சூரிட்டியின் போது 46.53 லட்சம் ரூபாய் உங்கள் கையில் கிடைக்கும்.

இதேபோல நீங்கள் 1 வருடத்தில் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும்போது 15 வருடங்களில் 22.5 லட்சம் முதலீடு செய்யும் நிலையில் வட்டி விகிதம் 47.37 லட்ச ரூபாயாக இருக்கும். மேலும் மொத்த மெச்சூரிட்டி தொகை 69.80 லட்சம் ரூபாயாக உங்கள் கைகளில் கிடைக்கும்.