இந்தியாவின் 2024- 25 காண நிதியாண்டின் புது பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல திட்டங்களைப் பற்றி கூறினார். இந்தத் திட்டத்தில் மிக முக்கியமான திட்டம் பி.என் இன்டர்ன்ஷிப். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டத்தின் கீழ் வேலை இல்லாத பட்டதாரிகள் மாதம் ரூபாய் 5000 உதவி தொகையாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் இந்தியாவில் சுமார் 6.2லட்சம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரதமர் மோடி தலைமையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு முதல் கட்ட மாதாந்திர தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.