விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், நான் இந்த நூலை….. இந்த கட்டுரைகளை எழுத தொடங்கிய போது,  கட்சித் தோழர்கள் இதை படிக்க வேண்டும், தமிழ் மண் வாசகர்கள் இதை படிக்க வேண்டும். என்னோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் இதை படிக்க வேண்டும். அப்போது தான் நமக்குள் ஒரு புரிதலும், புரிதல் அடிப்படையிலான ஒருங்கிணைந்த உழைப்பும் உருவாகும் என்கிற அந்த நம்பிக்கையில்  தான் நான் எழுத தொடங்கினேன்.

தமிழ் மண்னில்  அனைவரும் படிக்கக்கூடிய ஒரு எடு அல்ல.  கட்சி தோழர்களுக்கு மட்டும் தான்…..  ஒரு 13 ஆயிரம் பேர் சந்தாதாரரை சேர்த்தோம். அவர்களுக்கு மட்டும் தான் இது போனது. பெரும்பாலான பேர்  சந்தாதாரர்களாக இருந்தாலும் கூட….  அவருடைய முகவரிக்கு புத்தகம் போய் சேரும். யாரும் அதை பிரிப்பதே கிடையாது. அதில் பல பேர் அப்படி இருக்கிறவர்களும் உண்டு.

ஏனென்றால், சில பேருடைய வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். அப்படியே அஞ்சல எப்படி வந்ததோ  அப்படியே தமிழ் மண் கிடந்திருந்ததை பார்த்திருக்கிறேன். அந்த அஞ்சலை அவர்கள் உடைத்து கூட புத்தகத்தை பார்க்கவில்லை என்பதை அப்போது அறிந்து கொண்டேன். இதற்காகவே சிலருடைய வீட்டிற்கு போய் துலாவுகிறேன். போஸ்டர் கொடுத்திருப்போம். 30 போஸ்டர்….. நூறு போஸ்டர் அப்படியே அவர்கள் வீட்டில் பரணில் போட்டு வச்சிருப்பான். யாரிடைமுமே கொடுத்திருக்க மாட்டான். அதனால தான் நான் இப்ப போஸ்டர் அடிக்கிறதை நிறுத்திட்டேன் என தெரிவித்தார்.