
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி சுசித்ரா, தனது சமீபத்திய பேட்டியில் நடிகர் சூர்யா மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். “எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது நடிகர் சூர்யா புருஷனாக வர வேண்டும். என்று தனது உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“நானும் அவரும் ஆயுத எழுத்து படத்தில் இணைந்து நடித்தோம். அந்த சமயத்தில் சூர்யாவை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அதனை மணிரத்னம் பார்த்து திட்டிக்கொண்டே இருப்பார்” என்று படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை சுசித்ரா பகிர்ந்துள்ளார். சூர்யாவின் நடிப்புத் திறமை மற்றும் அவரது நட்பான குணம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.