திமுக கட்சியின் துணை முதலமைச்சரான உதயநிதி மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் தலைமைச் செயலக ஊழியர் ஒருவர், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசாணையின்படி, தமிழ் கலாச்சார ஆடையான வேஷ்டி சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐ-கோர்ட்டில் வக்கீல் சத்யகுமார் ஒருவர் வழக்கு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதே கோரிக்கையுடன் வக்கீல் பிரவீன் சமாதானம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் துணை முதலமைச்சர் அணிந்து வரும் டி-சர்ட்டில் கட்சி சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டி-சர்ட்டுடன் அவர் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அது திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார். எனவே கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.