அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கடந்த 1-ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கிய நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் முடிவுக்கு வந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து சூப்பர் 8 சுற்றுடன் போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. மேலும் முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி அரை இறுதி வாய்ப்பை பெறாமல் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.