
பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய்யின் கடைசி படம் இதுதான் என்று சொல்வதை தண்ணீரில் தான் எழுத வேண்டும். இன்னும் எத்தனை கடைசி படங்கள் வரும் என்பது தெரியவில்லை. இதற்கு முன்னால் கூட கடைசி படம் என்றுதான் சொன்னார். ஆனால் அதன் பிறகு மற்றொரு படம் என்று அறிவித்துவிட்டார்கள். புது அரசியல்வாதிகள் பேசுவதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும் என்பது சரிவர தெரியவில்லை. அதே நேரத்தில் மாநாடு நடத்துவது என்பது சவாலான விஷயம் என்பதை அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் மாநாட்டினை விஜய் சிறப்பாக நடத்தி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவுக்கு வருவது போல் கூட்டம் கூடும். ஆனால் கட்சியை எப்படி நடத்துவார் என்பது தான் தெரியவில்லை. வேலையை விட்டுவிட்டு மாநாட்டுக்கு வாருங்கள் என்று கூறுவதெல்லாம் சரியான யோசனை கிடையாது. விஜய் அரசியலுக்கு வருவதனால் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று நினைக்கவில்லை. ஓட்டுகள் வேண்டுமானால் சிதறலாம். Take என்று கூறியவுடன் சினிமாவில் வருவது போன்று நிஜத்தில் CM ஆகிவிட முடியாது. மேலும் விஜய் அரசியலுக்கு வருவது அவருக்குத்தான் நெருக்கடியாக அமையும் என்றும் கூறினார்.