
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், ரொம்ப அருமையான பேச்சிகளை எல்லாம் கேட்டோம். ஏற்கனவே பல்வேறு சாபங்களுக்கு…. பலருடைய சாபங்களுக்கு ஆளாகி… தன்னைத்தானே மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிற.. எடப்பாடி பழனிச்சாமி,
புரட்சித்தலைவர் உடைய உரிமைக்குரிய அந்த விதிகளை மாற்றி அவருடைய சாபத்துக்கு ஆளாகி இருக்கிறார். புரட்சி தலைவி அம்மா அமர்ந்த ஆசனத்திலே தான் தான் அமர வேண்டும் என்று எதேச்சதிகாரமாக ஒரு சர்வாதியாக மாறி… அந்த இடத்தில் அமர்ந்து அம்மாவுடைய சாபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இப்ப நம்முடைய கோபாலகிருஷ்ணருடைய சாபத்துக்கு ஆளாகி இருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் சாபத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதில் என்ன தெரிகிறது என்று சொன்னால் ? நியாய உணர்வுள்ள…. தர்ம உணர்வு சிந்தை மிக்க அத்தனை பேருடைய சாபத்திற்கும் ஆளாகி இருக்கிற எடப்பாடி, இனி இந்த இயக்கத்தை எப்படி நடத்த போகிறார் ?
அதில் டெல்லியில் கூப்பிட்டு, அவர வேற மாலை போட வைத்து… பக்கத்திலே நின்று பூங்கொத்து எல்லாம் கொடுக்க வைத்து விட்டார்களே… இனி என்ன நடக்குமோ என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். ஒன்னும் இல்லை… எட்டு தோல்விக்கு வழிகாட்டிய எடப்பாடி, இந்த பாரதப் பிரதமருக்கு ஒன்பதாவது தோல்விக்கு வழிகாட்டி விடக்கூடாது என்ற கவலை நமக்கு எல்லாம் இருக்கிறது என தெரிவித்தார்.